Monday, June 11, 2018

பிரித்தானியப்படை அணிவகுப்பில் சீக்கியவீரர்


பக்கிங்காம் அரண்மனையில் நடந்த பிரித்தானிய படைகளின் அணிவகுப்பில் முதல்முறையாக சீக்கிய வீரர் ஒருவர் தலைப்பாகையுடன் பங்கேற்றார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் பிரித்தானியப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் அந்த நாட்டு இராணுவத்தின் ‘கோல்ட்ஸ்டிரீம் கார்ட்ஸ்’ படைப் பிரிவைச் சேர்ந்த சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் லால் தலைப்பாகையுடன் பங்கேற்றார்.

இந்த அணிவகுப்பு பிரித்தானியாவில் மட்டுமன்றி ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதில் சீக்கிய வீரர் மட்டும் தனி அடையாளத்துடன் காணப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, “கடந்த 2016-ல் பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்தேன். பக்கிங்காம் அரண்மனை அணிவகுப்பில் தலைப்பாகை அணிந்து பங்கேற்றது மிகவும் பெருமையாக இருந்தது. சீக்கியர்கள் மட்டுமன்றி அனைத்து மதப்பிரிவினரும் பிரித்தானிய இராணுவத்தில் சேரலாம் என்பதற்கு நானே முன்னுதாரணம்” என்று தெரிவித்தார்

பிரித்தானிய அரச குடும்ப ஆட்சியின்போது போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் பல்வேறு படைப் பிரிவுகள் பக்கிங்காம் அரண்மனை முன்பு அணிவகுப்பு நடத்துவார்கள். இதை நினைவுகூரும் வகையில் 1748-ம் ஆண்டு தொடக்கம் பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளையொட்டி பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: