• Latest News

    Monday, June 4, 2018

    2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை - மத்திய அமைச்சர்


    2019-ம் ஆண்டு நடைபெற இருக்கிற மக்களவை தேர்தலிலும் பாஜகவே ஆட்சியை கைப்பற்ற உள்ளதால் பிரதமர் பதவி காலியாக இல்லை என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

    மத்தியில் பாஜக தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் பாஜக சார்பில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று உரையாற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

    நாட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியை வழங்கி வருகிறார். பிரதமரின் சிறப்பான ஆட்சிக்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார். மேலும் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. அதில் 20க்கும் மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர் என குறிப்பிட்டார்.







    வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. ஏனெனில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தெரிவித்தார்.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை - மத்திய அமைச்சர் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top