Sunday, June 3, 2018

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடு வலுவாக அமையும்: தெரேசா மே


மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து உயிரை காவுகொள்ள எதிர்பார்க்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க தீவிரமாக செயற்படுவோம் என பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்தி தொடர்ந்தும் வலுப்பெற்று வருமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்னும் தனது மனதை விட்டு நீங்கவில்லையென தெரிவித்துள்ள மே, உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பயங்கரவாதத்திற்கு எதிராக இன்று ஒட்டுமொத்த உலகமும் போராடி வரும் நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக முழு உலகமும் குரல்கொடுத்ததை நினைவுபடுத்தினார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தும் வலுவானதாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்

உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் கடந்த வருடம் இதே நாளில் வானை மோதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 48 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: