• Latest News

    Monday, June 4, 2018

    கோட்டாபய ராஜபகஷ போட்டியிட்டாலும் எதிர்கொள்ள தயார்! ஐக்கிய தேசிய கட்சி சவால்


    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபகஷ போட்டியிட்டாலும் கூட கலவலையடையப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே ஐ.தே.க.வின் நிலைப்பாட்டை  உறுதிப்படுத்தினார்.

    மேலும் அடுத்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் புதிய வேட்பாளரை களமிறக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், கூட்டு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மைத்திரியுடையது அல்ல எனவும் அது பொது அபேட்சகரை வெற்றிபெறச்செய்ய ஒன்று சேர்ந்த குழுவின் வேலைத்திட்டம் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

    அத்துடன் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோட்டாபய ராஜபகஷ போட்டியிட்டாலும் எதிர்கொள்ள தயார்! ஐக்கிய தேசிய கட்சி சவால் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top