Sunday, June 10, 2018

பெண்கள் ஆசிய கோப்பை டி20 – இந்தியாவை வீழ்த்தி வங்க தேசம் சம்பியன்

SHARE:

பெண்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் வெற்றி பெற்று வங்க தேச அணி சம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளது.

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியும் வங்கதேச அணியும் மோதின. டாஸ் வென்ற வங்க தேச பெண்கள் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் மிதாளி ராஜ் மற்றும் மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற கவுர் மட்டும் அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரில் நிறுத்தினார். பின்பு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. 20 ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கியது. ஷமினா சுல்தானா மற்றும் அயாசா ரஹ்மான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் 7 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து நல்லதொரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 

அடுத்து வந்த வீரர்கள் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக நிகர் சுல்தானா மற்றும் ரூமானா அகமதுவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையை வங்க தேச அணி கைப்பற்றியுள்ளது.
SHARE:

0 comments: