• Latest News

    Friday, July 13, 2018

    டெங்கு நோய் தாக்கத்தால் 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு...! வைத்தியசாலையில் பிழையா?


    டெங்கு நோய் தாக்கத்தினால் மன்னார் – தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.

    மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்த நோயளியின் இறப்பு தொடர்பில் உடனடியாக விசாரனைகளை மேற்கொள்ள பணித்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

    சிகிச்சை அல்லது வேறு முறைகளில் தவறுகள் எதுவும் இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரனையை மேற்கொள்ள வைத்தியசாலை பணிப்பாளருக்கு பணித்துள்ளதாகவும், அவ்வாறு குறைகள் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

    கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. ஒரு வீதமான உயிரிழப்பைக் கூட மன்னார் மாவட்டத்தில் சந்திக்கவில்லை.

    ஆனால் துரதிஸ்ரமாக 8 ஆண்டுகளின் பின்னர் தற்போது டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. இது ஒரு கவலைக்குரிய விடையம் என தெரிவித்த அவர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டெங்கு நோய் தாக்கத்தால் 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு...! வைத்தியசாலையில் பிழையா? Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top