Friday, July 13, 2018

பாகிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு: 85 பேர் பரிதாபமாக பலி


பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் முஸ்டங் நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 85 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதே போன்று பன்னு நகரில் ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.



0 comments: