Monday, July 30, 2018

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அனுமதிக்காவிட்டால்,,,,! டிரம்ப் எச்சரிக்கை...!


குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அனுமதிக்காவிட்டால் அரசை முடக்கி விடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மெக்ஸிகோ நாட்டுக்கு எதிராக சுவர் எழுப்புதல், குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குதல் தொடர்பான சட்டங்களை இயற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். 

ஆனால், எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள டிரம்ப், சுவர் எழுப்புதல், உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினர் வாக்களிக்காவிட்டால் அமெரிக்க அரசை முடக்கி விடப்போவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
SHARE:

0 comments: