Tuesday, July 31, 2018

மஹிந்தவின் உறவினருக்கு பகிரங்க பிடியாணை! நீதிமறந்த அதிரடி உத்தரவில் தப்பாத அவரது மனைவி!


முன்னாள் ஜனாதிபதியின் உறவினரும் அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிணை வழங்கிய அவரின் மனைவி மற்றும் அவரின் சகோதரிக்கும் மீண்டும் பிடியாணை பிறப்பிப்பதாகவும் கோட்டை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


குறித்த வழக்கு விசாரணையானது இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்துக்கு கட்டிடமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
SHARE:

0 comments: