Monday, July 30, 2018

காவேரி மருத்துவமனை முன்பு தொடர்ந்து குவிந்து வருகின்றனர் தி.மு.க தொண்டர்கள்!


திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு இன்றும் தொண்டர்கள் குவிந்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் 4 நாட்களாக காத்திருக்கின்றனர். 

தங்களது குரல் கேட்டால், கருணாநிதி உற்சாகம் பெற்று, பூரண குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் தொண்டர்கள், தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

திமுக தொண்டர்கள் களைந்து செல்லுமாறு, மு.க.ஸ்டாலின், கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் வேண்டுகோள் விடுத்தாலும், அதை ஏற்காத தொண்டர்கள் அங்கேயே இரவுபகல் பாராமல் கார்த்திருக்கின்றனர்.

இதனால், மருத்துவமனைக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறாமல் இருப்பதாக, போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைக்கு வரும் பிறநோயாளிகளும் பாதிக்கப்படாத வகையில், திமுக தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் போலீசார், தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

தொண்டர்கள் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
SHARE:

0 comments: