Tuesday, July 3, 2018

பாலிவுட் நடிகர் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!


பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஹிந்தி மற்றும் போஜ்பூரி படங்களில் நடித்து வந்த நடிகை, மிதுன் சக்கரவர்த்தி மகன் மகா அக்ஷ்ய்யுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், மகா அக் ஷய் தம்மைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, 4 ஆண்டுகளுக்கும் மேல் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி நடிகை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மகா அக்ஷ்ய் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் திருமண ஆசை காட்டி மோசம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

0 comments: