Saturday, July 7, 2018

விரைவில் மத்தளவை இந்தியாவிற்கும் வழங்கும் அமைச்சரவை பத்திரம்...!


ஹம்பாந்தோட்டை - மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது. 

விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவிற்கும், 30 வீத பங்குகளை இலங்கைக்கும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. 

குத்தகை உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதி மற்றும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் அமைச்சரவையே இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், அதனை 405 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

மத்தள விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சில பிரதிநிதிகள், கடந்த செவ்வாய்கிழமை, மத்தள விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

0 comments: