Monday, July 9, 2018

நவாலியில் 147 பேர் படுகொலை...! நினைவு தினம் அனுஷ்டிப்பு!


Tamil News நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூறப்பட்டுள்ளது. 

இன்று மாலை அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று அதன் பின்னர் தேவாலயத்திற்கு அருகாமையில் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. 

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.

குறித்த தினத்தில் வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

குறித்த தினத்தின் காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Navaly massacre of 147 Tamil civilians remembered - 23 Years Later in 2018 Navali Massacre: St.Peters Church in Navaly bombed with refugees inside.

St.Peters Church and St.Peters School in Navaly at a great distance away from the line of battle and where hundreds had sought shelter was deliberately bombed on 9 July 1995. 

On the day after the attack, 56 bodies were retrieved from the debris, many of whom were women and children. The death toll in this incident later increased to 120. 

13 babies died in their mother's arms. Rescue workers reported torn limbs and pieces of human flesh strewn over the area.
SHARE:

0 comments: