Tuesday, July 3, 2018

விஜயகலாவின் விடுதலைப்புலிகள் கருத்து: நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்


விடுதலைப் புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தினால் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றின் இடம்பெற்ற அமர்வின் போது விஜயகலா, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன் போது சபாநாயகர், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக தம்மிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது இராஜாங்க அமைச்சு பதவியை நீக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டமையால் நாடாளுமன்றம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Parliament adjourned briefly following tense situation erupted over the State Minister Vijayakala Maheswaran controversial speech on LTTE
SHARE:

0 comments: