Monday, July 9, 2018

கண்டி இனக் கலவரம்..! பிரதான சந்தேகநபர் உட்பட 10 பேருக்கு பிணை..! 3 ஆவது வழக்கில் மாட்டிய முக்கிய புள்ளி


Tamil News : கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று (திங்கட்கிழமை) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரான கைது செய்யப்பட்ட மகாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது 3 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 2 இல் மட்டுமே பிணை வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 3 ஆவது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் வீரசிங்கவை ஜுலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த 10 பேருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான 3 சரீர பிணை மற்றும் 5000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
SHARE:

0 comments: