Sunday, July 8, 2018

சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கி சூட்டினால் பரபரப்பு...! 2 பேர் பலி


Tamil News : கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பெட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உயிரிழந்தவர்களில் 58 வயதுடைய ஆண் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க பெண் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர் வைத்தியசலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் இதில் காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கடந்த 24 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Two people (Female - 50, Male - 58) died & 2 more injured following a shooting incident in Jampata Street Kotahena Colombo- Police
SHARE:

0 comments: