• Latest News

    Tuesday, July 10, 2018

    விஜயகலா விவகாரம்: சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு

    Attorney General orders IGP to immediately investigate & submit a report on the statement made by MP Vijayakala Maheswaran on LTTE.
    இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை வழங்குமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

    "தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்" என அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், குறித்த அறிக்கையால் தென் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

    இவ்வாறு இருக்கையில் அவரின் குறித்த கருத்து தொடர்பில் விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கையை வழங்குமாறு பூஜித் ஜெயசுந்தரவிற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விஜயகலா விவகாரம்: சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top