• Latest News

    Sunday, July 8, 2018

    ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவில்லை....! திட்டி தீர்க்கும் பந்துல குணவர்தன


    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரையான காலத்தில் முதல் முறையாக கடந்த வாரம் விலை தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

    அரசாங்கத்தை நடத்தும் விதத்தை பார்க்கும் போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் போதிய அறிவு இருப்பதாக தெரியவில்லை.

    அசாதாரணமாக வரிகள் அதிகரிக்கப்ப்டுள்ளதன் மூலம் வரி செலுத்துவோர் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போதைய அரசாங்கத்திடம் கொள்கை இல்லாததே ஒரே கொள்கை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவில்லை....! திட்டி தீர்க்கும் பந்துல குணவர்தன Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top