Sunday, July 1, 2018

பொருளாதார தடையை விலக்க சீனாவை நாடும் வடகொரியா?


பொருளாதார தடையை முன்கூட்டியே விலக்குவதற்கு உதவுமாறு சீனாவை வடகொரியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்புக்குப் பின்னர், சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தார். 

அப்போது, தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள உதவுமாறு கேட்டதாகவும், அதற்கு ஜீ ஜின்பிங், மிகுந்த அழுத்தம் கொடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் ஜப்பானின் யொமியுரி (Yomiuri) செய்தி இதழ் கூறியுள்ளது.
SHARE:

0 comments: