• Latest News

    Wednesday, July 4, 2018

    அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றது சவுதி: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார்

    அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தயார் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார். 

    உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இவ்வாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அசியிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சர்வதேச அளவில் எண்ணெய் தேவையை நிவர்த்தி செய்ய அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஒரு நாளில் 20 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யவும் அவர் கேட்டுள்ளார். 

    இதை ஏற்றுக் கொண்டு, கூடுதல் உற்பத்தி திறனை பயன்படுத்தி அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்ய தயாராகி வருவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. உற்பத்தி இரண்டு மில்லியன் பேரல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான எண்ணெய் சந்தையை சமம் செய்யும் வகையில் இந்நகர்வை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றது சவுதி: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top