Monday, July 2, 2018

மாத்தறை நகைக்கடை கொள்ளை - வாகனத்தின் உரிமையாளர் கைது

மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் ஹொரண, தலகல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டநபரின் மனைவியின் பெயரில் குறித்த வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் கொள்ளையர்களில் ஒருவரான கொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய நண்பரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE:

0 comments: