• Latest News

    Tuesday, July 3, 2018

    மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

    மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் மியன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

    விபத்தில் லொறியின் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார். 

    பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

    விபத்தில் காயமடைந்த ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

    சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top