• Latest News

    Tuesday, July 10, 2018

    இன்ஸ்டாகிராம் பதிவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் ! - வீடியோ

    ஈரானில் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதால் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் தங்களது நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவருகின்றனர்.

    ஈரானைப் பொருத்தவரை சமூக வலைதளங்களுக்கு மிகக் கடுமையான பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பின்தொடர்பாளர்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் மேடெஹ் ஹோஜப்ரி (Maedeh Hojabri) எனும் 18 வயது இளம் பெண், தாம் நடனமாடிய வீடியோக்களையும், செல்ஃபிக்களையும் பதிவிட்டார். அதில் பெரும்பாலானவற்றில் இஸ்லாமிய முறைப்படி தலையில் அணியும் ஹிஜாப் பயன்படுத்தாமலேயே வீடியோவை வெளியிட்டிருந்தார்.



    இதையடுத்து, போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்தனர். இந்நிலையில், நடனமாடுவது ஒன்றும் குற்றமல்ல எனக் கூறி ஏராளமானோர் அப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடனமாடி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்ஸ்டாகிராம் பதிவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் ! - வீடியோ Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top