Sunday, July 29, 2018

டிராய் தலைவரின் ஆதார் எண்ணைக் கொண்டு எந்த தகவலையும் எடுக்க முடியாது - மத்திய அரசு


டிராய் தலைவரின் ஆதார் எண்ணைக் கொண்டு எந்த தகவலையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை கட்டுப்பாடு ஆணையமான டிராயின் தலைவர் ஆர்எஸ் சர்மா டுவிட்டரில் தனது ஆதார் நம்பரை வெளியிட்டதுடன், அதனைப் பயன்படுத்தி தன்னைப் பற்றிய விவரங்களை திருட முடியுமா என்று சவால் விடுத்திருந்தார்.

அவரது சவாலை ஏற்று, ஆதார் பாதுகாப்பற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் பலர் சர்மாவின் செல்போன் எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டனர். 

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஆதார் நம்பர் இல்லாமலேயே பேன் நம்பர், செல்போன் நம்பர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒருவரின் விவரங்களை பல்வேறு இணையதளங்களில் இருந்து பெற முடியும் என்றார்.

அது போன்றே சர்மாவின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். 

இது டிஜிட்டல் உலகத்தின் வெளிப்பாடு என்றும், அதற்காக ஆன்லைன் நடைமுறையை குறை கூற முடியாது என்றும், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
SHARE:

0 comments: