Monday, July 2, 2018

இலங்கை தமிழ் குடும்பத்திற்காக நீதி கோரி ஒருமதமாக வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து பையோலா பகுதி மக்கள் தொடர்ந்தும் இலங்கையின் தமிழ் அகதி குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்றுக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பையோலா கிராமம் சுமார் 6 ஆயிரம் பேரைக் கொண்ட இடமாகும்.
இந்தப் பகுதியில் அரசியல் அந்தஸ்துகோரிய நிலையில் வாழ்ந்து வந்த இலங்கையின் நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோரும் அவர்கள் இரண்டு குழந்தைகளும் நாடு கடத்தப்படுவதற்காக மெல்போனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்றுக் கோரி பையோலா உள்ளுர் மக்கள் தொடர்ந்தும் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் மெல்பேனில் இலங்கை தமிழ் குடும்பத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பையோலா மக்கள் சுமார் 2 ஆயிரம் கிலோமீற்றரை கடந்த அங்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் நேரடியான கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் தமது போக்கில் இருந்து மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

0 comments: