Monday, July 2, 2018

சீனாவிடம் தேர்தல் நிதி வசூல்: முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது சீனாவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ  , 76 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இதுதொடர்பாக, எவ்வித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்துவந்த ராஜபக்ஷ , தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். 

அதில், ‘நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்துள்ள கட்டுரையில் காணப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நாளிதழில், ‘சீனாவிடம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ   காட்டிவந்த நெருக்கம் தொடர்பாக இந்தியா முன்னர் கவலை கொண்டிருந்தது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ராஜபக்ஷ  , ‘சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பாக இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் காங்கிரஸ் அரசுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நான் எப்போதுமே மீறியதில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, இலங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.
SHARE:

0 comments: