• Latest News

    Thursday, July 5, 2018

    கிரிவெஹர விகாராதிபதி துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

    கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    சந்தேகநபர்கள் நேற்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

    கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த மாதம் 12ம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிரிவெஹர விகாராதிபதி துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top