• Latest News

    Friday, July 13, 2018

    மார்க்கம் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்: ஒருவர் உயிரிழப்பு


    Canada Tamil News: மார்க்கம் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த சம்பவமானது நேற்று (வியாழக்கிழமை) Toronto/Buttonville நகர் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாவும், இதில் உயிரிழந்தவர் விமானி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

    இந்த விபத்தானது, விமான நிலையத்திற்கு வெளிப்புற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறிய பொலிஸார், இதில் காயமடைந்த விமானி தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

    மேலும் இது குறித்த சம்பவம் தொடர்பில் போக்குவரத்து பாதுகாப்பு சபை, ஒரு விசாரணைக் குழு ஒன்றினை அமைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மார்க்கம் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்: ஒருவர் உயிரிழப்பு Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top