• Latest News

    Sunday, July 1, 2018

    வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: கனடா


    மனித உரிமைகள் வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.

    குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, அனைத்து இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது. அந்தவகையில் காணாமற் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக, அமைதியான, நல்லிணக்கமான, சமரசமான, செழிப்பான நாட்டை உருவாக்குவதாக, தமது சொந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை, முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கைக்கு தொடர்ச்சியாக கோரி வருகிறோம்.

    அனைத்துலக சமூகம், பூகோள அமைப்புகளுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதில் இலங்கை முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தனது வணிக உறவுகளை விரிவாக்கி முதலீட்டு வளங்களை பலப்படுத்தியிருக்கிறது.

    இந்தப் பாதையில் பயணிக்க இலங்கையும், அதன் மக்களையும் , கனடா தொடர்ந்தும், வலுவாக ஊக்குவிக்கும். அத்துடன் எங்கு எங்கு உதவ முடியுமோ அங்கெல்லாம் நாமும் அதற்கு உதவி செய்வோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: கனடா Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top