Monday, July 9, 2018

கொழும்பை பார்த்து பிரமித்துபோன தென்னாபிரிக்க வீரர்


Tamil News : கொழும்பு நகரம் தான் முன்னர் பார்த்ததை விட மிகவும் மாற்றமடைந்திருப்பதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் வீதிகள் சிறந்ததாகவும் தூய்மையாக இருப்பதாகவும், பூங்காக்கள் அலங்காரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு தான் இலங்கைக்கு வந்த போது காணப்பட்ட நிலைமை விட தற்போது கொழும்பில் பெரிய மாற்றங்களை காண முடிந்துள்ளதாகவும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் டேல் ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

டேல் ஸ்டெய்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டு பதிவில் இதனை கூறியுள்ளார். தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.


SHARE:

0 comments: