Saturday, July 7, 2018

யாழ் மக்களுக்காக எதையும் செய்ய தயார் அமைச்சர்


யாழ் மக்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து உதவி செய்வேன் என சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

10 கோடி ஏற்றுமதிப் பயிர்களை நாட்டும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 5 தடவையும் யாழ் வரும் போதும் யாழில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுனைப்படுத்த அரசாங்க அதிபர் மற்றும் உரிய அதிகாரிகள் ஒத்துழைப்பினை வழங்குகின்றனர்.

இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் இல்லாத அளவில் துரிதமாக பலவேலைத் திட்டங்களை செய்வதற்கு இலகுவாக உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வடகிற்காக என்ன செய்யப்போகின்றீர்கள் என எப்போதும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள வறிய மக்களுக்கு நான் எமது அமைச்சினூடான வேலைத்திடங்களின் கீழ் உதவிகளை வழங்குவேன் என அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments: