Tuesday, July 10, 2018

சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தஷ்வந்திற்கு தூக்கு தண்டனையை உறுதி!


Tamil News : சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்திற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், தஷ்வந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், தொழில்நுட்ப பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்ன,ர் அவர் பிணையில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச் சென்றார். பின்னர், விசேட பொலிஸார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.

குறித்த வழக்கில் அவருக்கு கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியதுடன் அவருக்கு 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments: