• Latest News

    Monday, July 9, 2018

    ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வல்லுறவின் பின் படுகொலை: 3 பேருக்கு மரண தண்டனை


    Tamil News : டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    டெல்லியில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 வதான மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப்பின் டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். 

    நிர்பயா என்ற மாற்று பெயரில் அழைக்கப்படும் அந்த பெண்ணின் மரணம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் 17வயது சிறுவனாக இருந்த காரணத்தால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானான்.

    மற்றொரு குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றமும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்து இருந்தது. அந்த 4 பேரில் அக்சய்குமார்சிங் என்பவனை தவிர்த்து, முகேஷ், பவன்குப்தா, வினய்சர்மா ஆகிய 3 பேரும் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக்மிஷ்ரா, நீதிபதிகள் பானுமதி, அசோக்பூசன் அடங்கிய அமர்வு ஏற்கனவே அறிவித்தபடி இன்று தீர்ப்பளித்தது. நீதி என்ற பெயரில் மரண தண்டனை விதிப்பது கொலைக்கு ஒப்பானது என்று 3 குற்றவாளிகள் தரப்பின் வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    தண்டனையை மறு ஆய்வு செய்வதற்கு அடிப்படை ஆதாரமும் எதுவும் இல்லை என்று கூறி 3 பேரின் சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வல்லுறவின் பின் படுகொலை: 3 பேருக்கு மரண தண்டனை Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top