• Latest News

    Monday, July 9, 2018

    ரொறன்ரோ குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு!


    Canada Tamil News : ரொறன்ரோ குடியிருப்பு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

    குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு சென்றபோது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுய நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

    மேலும் அவர் சம்பவம் இடம்பெற்றபோதே உயிரிழந்து விட்டதாகவும், அவரின் உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

    அத்துடன் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை, இந்நிலையில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தேடி வருவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரொறன்ரோ குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு! Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top