Tuesday, July 3, 2018

கனடாவில் தஞ்சம் புகுந்த அரேபிய பெண்ணின் கோரிக்கையை ஏற்குமா கனடா?


கனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த பெண் அகதி ஒருவர் பர்தா அணிய தடை விதிக்குமாறு கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தில்புரட்சிகர கருத்துக்களை எழுதி வந்த குறித்த பெண், சவுதி அரேபிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் Raif Badawiயின் மனைவியான Ensaf Haidar தனது மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் தஞ்சம் புகுந்தார்.

கனடா தினமாகிய நேற்று அவர்கள் மூவருக்கும் கனடா குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், பர்தா அணிய தடை விதிக்குமாறு அவர் கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகளே இல்லாத சவுதி அரேபியாவில் பிறந்த கனடா நாட்டவளாகிய நான், பெண்களை வெறுக்கும் ஆண்கள், எந்த உரிமைகளும் இல்லாத வலிமையற்ற பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தேன்.

ஒரு அகதியாக கனடாவில் வாழ்ந்தபோது தங்கள் எல்லையைக் குறிக்கும் நோக்கில் இஸ்லாமியக் குழுக்கள் பெண்களை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவதைக் கவனித்தேன். இஸ்லாமில் எங்குமே ஒரு பெண் தன் முகத்தை மூடவேண்டும் என கூறப்படவில்லை.

இது பெண்களை மிருகங்களாகவும் ஆணின் சொத்தாகவும் நடத்தி அவர்களை மனிதத்துவமின்றி அடிமைகளுக்கு ஒத்த உடை உடுத்தச் செய்த, பெண்களை வெறுக்கும் இடைக்காலத்தைச் சேர்ந்த ஆண்களின் செயலாகும்.

இந்த காரணத்துக்காகத்தான் கனடா குடிமகளாக ஆகிய முதல் நாள் ஒண்டாரியோவில் பர்தாவை தடை செய்யும் விடயத்தை முன்வைத்துள்ளேன். அரசு எனது கோரிக்கையை ஏற்று நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: