Tuesday, July 31, 2018

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் ரஜினி!


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந் வருகை தந்துள்ளார்.

கருணாநிதிக்கு 4 ஆவது நாளாக சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வருகைதந்து, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த 27 ஆம் திகதி நள்ளிரவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்னர் மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி. * ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தேன் - ரஜினி.
SHARE:

0 comments: