• Latest News

    Wednesday, July 4, 2018

    கருணாவிற்கு பிரதி அமைச்சு கொடுத்தவர்கள் விஜயகலா பற்றி பேச தகுதியற்றவர்கள்! பிரதமர் ஆவேசம்


    நாடாளுமன்றத்தில் இன்று கூச்சல் குழப்பம் விளைவைத்தவர்கள் அன்று பொலிஸாரைக் கொன்ற கருணாவிற்கு பிரதி அமைச்சு பதவி வழங்கியவர்களே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

    இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

    அத்துடன் கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பிரபாகரனுக்கு பணம் வழங்கி தேர்தலில் வென்றவர்கள், அதுமட்டுமன்றி அன்று புலிகளை வென்ற இராணுவத்தினர் மற்றும் இராணுவ தளபதியை சிறையில் அடைத்தார்கள்.

    மேலும், 600 பொலிஸாரை கொன்ற கருணாவுக்கு கட்சியில் உபதலைவர் பதவியை வழங்கியுள்ளார்கள். இவற்றை எல்லாம் செய்து விட்டு எப்படி இவர்கள், வடக்கில் விஜயகலா பேசியதை விமர்சிக்க முடியும் என பிரதமர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

    அத்துடன் இவர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பமிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சபை நாகரீகத்தை முற்றிலும் சிதைத்து விடுவார்கள் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கருணாவிற்கு பிரதி அமைச்சு கொடுத்தவர்கள் விஜயகலா பற்றி பேச தகுதியற்றவர்கள்! பிரதமர் ஆவேசம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top