• Latest News

    Friday, July 6, 2018

    ரஞ்சனின் செயற்பாடு துரோகத்தனமானது..! விஜயகலா ஆவேசம்


    ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் அனைத்து ஊடகங்களின் முன்னிலையில் என்னுடன் உரையாடியமை துரோகத்தனமானது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துத் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன். அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் அவர் நேரடியாக ஊடகங்களின் முன்பாக இருந்து கொண்டு தொலைபேசியை வைத்துக் கதைப்பது தெரியாது.

    அவர் தொடர்பினைத் துண்டித்த பின்னர் எனக்கு வந்த வேறொரு அழைப்பின் மூலமாகவே இந்த விடயத்தினை அறிந்து கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேயே எனது சிறப்புரிமையை மீறல் ஆகும்.

    இந்தச் செயற்பாடு மூலம் அவர் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் எவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதை இந்த உலகம் தற்போது அறிந்திருக்கின்றது.

    இப்படியானவர்கள் தான் இந்த நாடாளுமன்றில் தற்போது இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அவர்களது கருத்துக்களை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.

    இந்த விடயத்தினை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்தவுள்ளேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரஞ்சனின் செயற்பாடு துரோகத்தனமானது..! விஜயகலா ஆவேசம் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top