Sunday, July 29, 2018

இலங்கை அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி


இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென் ஆபிரிக்க அணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, தென் ஆபிரிக்க அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 193 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 31 ஓவர்கள் நிறைவில் 196 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அந்த அணி சார்பில் ஜே.பி. டுமினி 53 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 47, பாப் டுபிளசிஸ் 47 ஓட்டங்களை அதிகமாக பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: