Sunday, July 8, 2018

விஜயகலாவை பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயருக்கு மட்டுமே...!


Tamil News : நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவும், அனுசரணையும் வழங்குவதில்லை என அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்து, அதனை மீறி குற்றத்திற்காக சபாநாயகரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய முடியும்.

1979ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைய 90 நாட்கள் தடுப்புக்காவலிலும் வைக்க முடியும்.

அரசியலமைப்புச் சட்டத்தை மீறியமை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலாநிதி மஹாநாமஹேவா, மகிந்த ராஜபக்ச அணியில் அங்கம் வகிப்பதுடன் கோத்தாபாய ராஜபக்சவுக்கு ஆதரவான வியத் மக, எளிய போன்ற அமைப்புகளிலும் அங்கம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: