Tuesday, July 3, 2018

குகைக்குள் மாயமான சிறுவர்கள் 9 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு...!


தாய்லாந்தில் மழையில் சிக்கி குகைக்குள் மாயமான 12 மாணவர்கள் 9 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டனர். 

தாம் லுவாங் நாங் நான் (Tham Luang Nang Non) மலைப்பகுதியில் கடந்த 23 ஆம் திகதி கால்பந்து விளையாடும் 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்சியாளரும் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது, மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அவர்கள் குகை ஒன்றில் ஒதுங்கினர். 

அதன் பின்னர் கடந்த 9 நாட்களாக அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததால் அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதனிடையே மாயமான சிறுவர்கள் அனைவரும் குகைக்குள் பத்திரமாக இருப்பதாகவும், பயிற்சியாளருடன் அவர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டு விட்டதாகவும் தாய்லாந்து நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.


0 comments: