• Latest News

    Tuesday, July 3, 2018

    துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயம்!


    பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் 28 வயதுடைய மற்றும் 32 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு உயிராபத்து ஏதுமில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயம்! Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top