Tuesday, July 3, 2018

ஐஸ்ல் பட் தீவிலிருந்து 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு


ஸ்கொட்லாந்திலுள்ள ஐஸ்ல் பட் என்ற தீவிலிருந்து 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனதாக கூறப்படும் குறித்த சிறுமியின் உடல் நேற்று (திங்கட்கிழமை) ஐஸ்ல் பட் தீவிலுள்ள பழமையான விடுதி ஒன்றுக்கு அருகிலிருந்து பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி உயிரிழப்பதற்கு இரண்டரை மணிநேரத்திற்கு முன்பே காணாமற்போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சிறுமி எதற்காக கடத்தப்பட்டு கொலை செய்யபட்டுள்ளார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்கொட்லாந்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments: