Tuesday, July 31, 2018

விஜயகலா சர்ச்சை கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கையை ஆராய விசேட பிரதிநிதி


முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக மேலதிக சொலிஸிஸ்ட ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் சட்டமா அதிபரினால் நிமியக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரச சட்டத்தரணியின் ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த லியனகே கடந்த 9 ஆம் திகதி சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமையவே, சட்டமா அதிபரினால் குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Mrs Vijayakala Maheswaran #Tamil News #Seithi
SHARE:

0 comments: