Sunday, July 29, 2018

இங்கிலாந்தில் விராட் கோலி திறமையை நிரூபிக்கும் நேரம் இது – கிளென் மெக்ராத் நம்பிக்கை

share :

சென்னை: இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி ரன் குவிப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், “இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். சமீப காலமாக இந்திய அணியின் பந்துவீச்சு சிறந்த முறையில் இருந்து வருகிறது. 

காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஓய்வில் இருப்பது இந்திய அணிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கும்.

விராட் கோலி உலகின் எந்தப் பகுதியிலும் சிறப்பாக ஆடக் கூடியவர். ஆனால், இங்கிலாந்தில் அவருடைய பேட்டிங் முறையில் மாற்றம் இருக்க வேண்டும். 

பேட்டிங்கில் அனைத்து விதமான நுட்பங்களையும் அறிந்தவர் கோலி. எந்தவித பயமுமின்றி மிகவும் வெளிப்படையாக விளையாடும் விராட்கோலி, மற்ற வீரர்களை விட சிறந்து விளங்குபவர்.

இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் விராட் கோலி ரன் குவித்து தன்னை அவர் நிரூபிக்கும் நேரம் இது. 

இங்கிலாந்து மண்ணில் பந்தை எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்று. அங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடினால் விராட் கோலி நிச்சயமாக அதிக ரன்களை குவிப்பார்” என்று கூறினார்.
share :

0 comments: