Sunday, July 29, 2018

Zimbabwea நாட்டில் நாளை குடியரசுத்தலைவர் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்

share :

Zimbabwea நாட்டில் நாளை குடியரசுத்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

94 வயதான Robert Mugabe 37 ஆண்டுகள், குடியரசுத் தலைவராக ஆட்சி செய்து கடந்த நவம்பரில் ராஜினாமா செய்த நிலையில், நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இடைக்கால தலைவராக செயல்பட்ட Emmerson Mnangagwa வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில், 15 சதவீதம் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

வாக்குகள் நாளை பதிவாகும் நிலையில், 5 நாட்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
share :

0 comments: