Thursday, August 2, 2018

தீயில் கருகி தாயும் , 10 வயது குழந்தையும் உயிரிழப்பு

செஞ்சி அருகே தீயில் கருகி தாயும், 10 மாத குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் பெருங்காப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 10 மாதத்தில் நவீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில், ரேகா வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். 

அப்போது, வீட்டிற்குள் ரேகாவும், நவீனும் உடல் கருகி நிலையில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE:

0 comments: