Thursday, August 2, 2018

110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை

பீஹார் மாநிலத்தில் 110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது. 

பீஹார் மாநிலம் முங்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தை திடிரே கிணற்றினுள் தவறி விழுந்துவிட்டது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆழ்துளைக் கிணற்றின் அருகே சுமார் 50 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில் 30 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், அந்தக் குழந்தை நேற்று மாலை மீட்கப்பட்டது. உடனடியாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அந்தக் குழந்தையை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
SHARE:

0 comments: