Tuesday, August 7, 2018

பாலியல் துஷ்பிரயோகத்திற்காக மகனைவிற்பனை செய்த பெற்றோருக்கு 12 வருட கடூழிய சிறை...!


ஜேர்மனியில் தனது மகனை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த பெற்றோருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜேர்மனியின் ஃப்ரைபேக்கைச் சேர்ந்த பெற்றோர்கள், தனது 9 வயதான மகனை ஆபாசத்திரைப்பட வலைத்தளமொன்றிற்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு ஃப்ரைபேர்க் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தைக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, வலைத்தளத்தின் ஊடாக சிறுவர்களை விலைக்கு வாங்கி ஆபாசப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஸ்பெயினைச் சேர்ந்த குற்றவாளிக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருந்த சிறுவன் தற்போது வளர்ப்புப் பெற்றோர்களுடன் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: