Monday, August 6, 2018

இரு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து: 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

SHARE:

பொல்காவலை புகையிரத நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று, இயந்திர கோளாறு காரணமாக பொல்காவலை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பிற்பகல் 4.50 மணியளவில் கொழும்பில் இருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த மற்றுமொரு புகையிரதமானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தில் மோதியது.

குறித்த விபத்தில் காயமடைந்த 25 பேர் தற்போது பொல்காவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Approximately 25 passengers have been admitted to nearby hospitals as a train on Colombo-Kandy main line collided with another Kandy bound train near Polgahawela station
SHARE:

0 comments: